கோவிலில் வழிபடும் முறை

கோவிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுர வாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோவிலுக்குள் நடக்க வேண்டும். ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம். பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம். இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, … Continue reading கோவிலில் வழிபடும் முறை